Home இந்தியா மக்கள் தொகையில் இந்தியா சீனாவை முந்துகிறது – ஐ.நா தகவல்

மக்கள் தொகையில் இந்தியா சீனாவை முந்துகிறது – ஐ.நா தகவல்

503
0
SHARE
Ad

11slide2நியூயார்க், ஜூன் 15 – “அடுத்த, 15 ஆண்டுகளில், உலக மக்கள் தொகையில், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடம் வகிக்கும்’ என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால், உலகின் பல நாடுகளும், வேலை வாய்ப்பு, உணவு உற்பத்தி உள்ளிட்ட விஷயங்களில் பின்னடைவை சந்தித்து வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில், உலக மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனா, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, ஒரு குழந்தை திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தியுள்ளது.

ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் மக்கள் தொகை குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதன்படி அடுத்த 15 ஆண்டுகளில், மக்கள் தொகையில், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று ஐ.நா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது 127 கோடியாக உள்ள இந்திய மக்கள் தொகை வரும் 2028 ஆம் ஆண்டில் 145 கோடியாக இருக்கும் என்றும், 2100 ஆம் ஆண்டு முடிவில் சீனாவின் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்து, 101 கோடியாகவும், இந்திய மக்கள் தொகை மிகவும் அதிகரித்து 154 கோடியாகவும் இருக்கும் என்றும் ஐ.நா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.