Home இந்தியா கருணாநிதியுடன் ஜெயந்தி நடராஜன் திடீர் சந்திப்பு!

கருணாநிதியுடன் ஜெயந்தி நடராஜன் திடீர் சந்திப்பு!

536
0
SHARE
Ad

imagesசென்னை, ஜூன் 15 – தி.மு.க தலைவர் கருணாநிதியை, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த திடீர் சந்திப்பு கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் நடந்த இருவரின் சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“கருணாநிதியின் 90வது பிறந்த நாளன்று, நான் வெளிநாட்டில் இருந்ததால், நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல முடியவில்லை. அதனால், மரியாதை நிமித்தமாக இப்போது சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் தி.மு.க.,வை காங்கிரஸ் ஆதரிக்குமா? என்பது குறித்து, சோனியா தான் முடிவெடுப்பார். அதே போல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி குறித்து, கட்சியின் மேலிடத் தலைவர்கள் தான்  முடிவு அறிவிப்பார்கள் என்று ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.