Home Uncategorized ஞாபகசக்தி பெருகுவதற்கு வல்லாரையின் மருத்துவ குணங்கள்

ஞாபகசக்தி பெருகுவதற்கு வல்லாரையின் மருத்துவ குணங்கள்

1236
0
SHARE
Ad

செயலில் வல்லாரை
அறிவில் வல்லாரை
ஆற்றலில் வல்லாரை
அதுவே மூலிகையில்
ஒரு வல்லாரை

“வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்பது பழமொழி.
வல்லாரைய அதிகப் பேர்விரும்பி உண்பார்கள் ஏனென்றால் அதன் சுவை மட்டுல்ல மருத்துவத்திற்கு சிறந்த கீரை வகையாகும்.
வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரத்திற்கு இருமுறையேனும் பயன்படுத்த வேண்டும்.

அதிகாலையில் மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயிலிட்டு மென்று சாப்பிட்டு நான்கு மணித்தியாலம் எதையும் உண்ணாமல் பின் பசும்பால் அருந்தவும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும்.

#TamilSchoolmychoice

vallaraiவல்லாரை இலைகள் மூன்று, பாதாம் பருப்பு சிறிது, ஏலக்காய் ஒன்று, மிளகு மூன்று, கற்கண்டு பத்து கிராம் ஆகியவற்றை அம்மியில் அரைத்து, அதைப் பாலில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து 21 நாட்கள் உண்டு வர இதயநோய்கள் நீங்கும்.

கால் கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து, அதனுடன் 5 வல்லாரை இலைகளையும், ஐந்து மிளகையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தேவையான அளவில் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து, அந்த மாவில் ரொட்டி போல் சுட்டு சாப்பிட்டு வர, சிரங்கு, தோல் நோய்கள், குஷ்டம் போன்றவை விலகும்.

வல்லாரை இலையைக் காயவைத்து சீரகம், மஞ்சள் சேர்த்துத் தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் காலை, மாலை உணவுக்கு முன்பாக இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தி வர, அறிவு மேம்படும். நினைவாற்றல் பெருகும். மூளை பலம் உண்டாகும்.

அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, காமாலை குணமாகும்.

வல்லாரை இலைச்சாற்றில் அரிசித் திப்பிலியை ஊறவைத்து உலர்த்தித் தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் சிறியளவு அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, நாள்பட்ட கபநோய்கள், இரைப்பு, இருமல் ஆகியவை குணமாகும்.

வல்லாரை கற்ப மூலிகைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. வல்லாரைக் கற்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, பேதி மற்றும் வாந்தி செய்விக்கும் மருந்துகளால் உடல் சுத்தி செய்துகொள்ள வேண்டும். வேதி பிடித்தல் போன்ற ஆவிக் குளியல் முறைகளால் உடலில் வியர்வையை உண்டாக்கி கழிவுகளை நீக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஐந்து வல்லாரை இலைகளை எடுத்து அரைத்துப் பிழிந்து சாறெடுத்து உட்கொள்ள வேண்டும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, அதன்பின் உப்பில்லாக் கஞ்சியைத் தேவையான அளவில் பருக வேண்டும்.

நாள்தோறும் ஒவ்வொரு இலை அதிகம் சேர்த்து 21 நாட்கள் சாப்பிட்டு, உப்பில்லாக் கஞ்சியைப் பருகி வர, மூளை பலப்படும். அறிவுக் கூர்மை, அற்புத நினைவாற்றல், சுறுசுறுப்பு போன்றவை உண்டாகும்.

சாப்பிட ஆரம்பித்த இரண்டு வாரங்களிலேயே நூல்களைப் படைக்கும் சக்தி உண்டாகும். மனசக்தி உண்டாகும். தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் உடல் இறுகும். உடலில் காந்த சக்தி, அழகு உண்டாகும். ஆயுள் விருத்தியாகும்.

இவ்விலையை அரைத்து படை, வீக்கம், யானைக் கால் வீக்கம், ரணம் இவைகட்கு மேல் பூசுவதால் அதிக நன்மை தரும்.

வல்லாரையை இடித்தெடுத்துப் பிழிந்த சாறு நல்லெண்ணெய் அல்லது தே.எண்ணெய் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து எரிக்க, அடிமண்டி மெழுகு போல விரலால் உருட்டும் போது திரளும் பதத்தில் இறக்கி வடிகட்டி தினந்தோறும் தலையில் தடவியும், தேய்த்துக் குளித்தும் வர, மூளைத்தெளிவு, குளிர்ச்சி தந்து நரையைத் தடுக்கும்.

வல்லாரை இலையை பால் கலந்து அரைத்து, விழுதை நெல்லிக்காய் அளவு உண்டு வர நரை, திரை அகலும். இளமைத் தோற்றம் திரும்பும். எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் நீங்கும்.