Home உலகம் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் மண்டேலா உடல்நிலை முன்னேற்றம்

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் மண்டேலா உடல்நிலை முன்னேற்றம்

504
0
SHARE
Ad

ஜோகன்னஸ்பர்க், ஜூன் 17- தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (வயது 94) சில நாட்களாக நுரையீரல் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 8-ந் தேதி அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது.

Nelson Mandelaஇதைத்தொடர்ந்து அவர் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள பிரிடோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபர் ஜேக்கப் ஜுமா நேற்று தெரிவித்தார்.