Home உலகம் பிரிட்டோரியாவில் நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட சிலை!

பிரிட்டோரியாவில் நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட சிலை!

873
0
SHARE
Ad

nelson (2)பிரிட்டோரியா, டிச 17- தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி, உலகிலேயே அவருக்கான மிகப் பெரிய சிலை தென் ஆப்ரிக்கத் தலைநகர் பிரிட்டோரியாவில் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.

வெண்கலத்திலான மண்டேலாவின் அந்த உருவச் சிலை, ஒன்பது மீட்டர்கள் உயரமும் நான்கரை டன் எடையும் கொண்டது. பிரிட்டோரியாவில் அரசு தலைமையகமான யூனியன் கட்டிடத்துக்கு எதிரேயுள்ள புல்வெளியில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டினை நெல்சன் மண்டேலா முன்னெடுத்து சென்றார் என்பதை குறிக்கும் வகையில் இரண்டு கைகளையும் நீட்டி விரித்த வண்னம் அவரது சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பரந்து விரிந்த மண்டேலாவின் கைகள் அனைவரையும் அனைத்து செல்ல அவர் முற்பட்டதை சுட்டிக்காட்டுகிறது என்று சிலையை திறந்து வைத்த தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா புகழாரம் சூட்டினார்.

தென் ஆப்ரிக்காவில் ஒருமைப்பாட்டுத் தினமாக அனுசரிக்கப்பட்டு வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி மண்டேலாவின் உருவச் சிலை, திறந்து வைக்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவின் இன மோதல்கள் முடிவுக்கு வந்த தினமாக டிசம்பர் 16 ஆம் தேதி கருதப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.