Home உலகம் தென்னாப்பிரிக்காவின் கடைசி வெள்ளை அதிபர் வில்லியம் டி கிளர்க் காலமானார்

தென்னாப்பிரிக்காவின் கடைசி வெள்ளை அதிபர் வில்லியம் டி கிளர்க் காலமானார்

441
0
SHARE
Ad

பிரிட்டோரியா : நீண்டகாலமாக சிறுபான்மை வெள்ளையரால் ஆட்சி செய்யப்பட்டு வந்த தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் பிரெடரிக் வில்லியம் டி கிளர்க் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 11) தனது 85-வது வயதில் காலமானார்.

தென் ஆப்பிரிக்காவின் கடைசி வெள்ளை அதிபர் என்ற வரலாற்றுப் பெருமையையும் கொண்டவர் டி கிளர்க். புற்றுநோயால் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தனது பதவிக் காலத்தின்போது நீண்டகாலமாக சிறையில் இருந்த நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்கும் டி கிளர்க் காரணமாக இருந்தார்.

#TamilSchoolmychoice

உலக நாடுகளின் கண்டனங்களைத் தொடர்ந்து அவர் தென்னாப்பிரிக்காவின் அரசியல் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி,  தென் ஆப்பிரிக்காவில் பிரிவினை வாத வெள்ளையர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். நீண்ட காலம் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா விடுதலையானார்.

பெரும்பான்மை கறுப்பின மக்களைக் கொண்ட தென் ஆப்பிரிக்காவில் 1994-இல் நடைபெற்ற முதல் ஜனநாயகத் தேர்தலில் ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. நெல்சன் மண்டேலா அதிபரானார். அப்போது முதல் இப்போதுவரை கறுப்பின அதிபர்களே தென்னாப்பிரிக்காவை ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் கட்சியின் வழி ஆட்சி நடத்தி வருகின்றனர்.

நெல்சன் மண்டேலா – டி கிளார்க் – 1993-இல் நோபல் பரிசை பரிசை பகிர்ந்து கொண்டபோது…

தென் ஆப்பிரிக்காவில் பிரிவினைவாத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாக 1993-ஆம் ஆண்டில் டி கிளார்க், நெல்சன் மண்டேலா இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

டி கிளார்க் 2018 முதல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.