Home உலகம் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார்!

நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார்!

971
0
SHARE
Ad

கேப் டவுன் – மறைந்த முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியும், தென்னாப்பிரிக்காவின் தாய் என அம்மக்களால் போற்றப்பட்டவருமான வின்னி மண்டேலா (வயது 81) கடந்த திங்கட்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த திங்கட்கிழமை சிகிச்சைப் பலனின்றி காலமானதாக வின்னி மண்டேலாவின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிக்கை விடுத்திருக்கின்றனர்.

இனவெறிக்கு எதிராகப் போராடி, உலகச் சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த மாமனிதர் நெல்சன் மண்டேலா, கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice