Home இந்தியா “பத்மஸ்ரீ” விருது பெற்றார் ரம்லி இப்ராகிம்!

“பத்மஸ்ரீ” விருது பெற்றார் ரம்லி இப்ராகிம்!

1061
0
SHARE
Ad

புதுடெல்லி – பரத நாட்டியம், ஒடிசி நடனங்கள் மற்றும் கலைத் துறையில் இணையில்லா சேவையாற்றி உலகப் புகழ் பெற்றிருக்கும் மலேசியக் கலைஞர் டத்தோ ரம்லி இப்ராகிமுக்கு, நேற்று திங்கட்கிழமை, புதுடெல்லியில், “பத்மஸ்ரீ” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த விருது விழாவில், கருப்பு நிறத்தில் மலாய்காரர்களின் பாரம்பரிய உடையில் தோன்றிய ரம்லி இப்ராகிமுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் “பத்மஸ்ரீ” விருது வழங்கி கௌரவித்தார்.

65 வயதான ரம்லி இப்ராகிம், கடந்த 40 ஆண்டுகளாக பாரம்பரிய ஒடிசி நடனக் கலைஞராகவும், பயிற்றுநராகவும் இருந்து வருவதோடு, சூத்ரா அறக்கட்டளையை உருவாக்கி ஆண்டுதோறும் நிறைய மாணவர்களுக்கு நடனப் பயிற்சி வழங்கி வருகின்றார்.

#TamilSchoolmychoice

பத்மஸ்ரீ விருது பெற்றது குறித்து ரம்லி இப்ராகிம் கூறுகையில், “சூத்ரா அறக்கட்டளைக்கு இவ்விருது ஒரு ஊக்கமாக இருக்கின்றது. வெற்றி தானாக தேடி வரும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை உயர்த்தும் பொறுப்பு இவ்விருதுக்கு இருக்கின்றது.

“மேலும், இவ்விருது மலேசியா, இந்தியா இடையிலான கலாச்சாரத் தொடர்புகளை மேலும் அதிகரிக்க உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். மிக முக்கியமாக நமது முயற்சிகள் அரசியல் அல்லது பொருளாதார நிகழ்வுகளால் தூண்டப்படாமல், இந்தியக் கலைகளின் மீதான நேசமாக இருந்து வருகின்றது” என்று ரம்லி இப்ராகிம் கூறியிருக்கின்றார்.