புது டில்லி: இந்திய பாரம்பரிய நடனத்தில் மலேசியாவின் புகழ்பெற்ற நடன இயக்குனர் டத்தோ ரம்லி இப்ராகிம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை புது டில்லியில் இந்தியாவின் பல நகர நடன நிகழ்ச்சிக்கானப் பயணத்தைத் தொடங்கினார்.
கோலாலம்பூரைச் சேர்ந்த சூத்ரா அறக்கட்டளையைச் சேர்ந்த ஐந்து நடனக் கலைஞர்களுடன், ரம்லி, நாளை ஞாயிற்றுக்கிழமை சண்டிகரில் நிகழ்ச்சி நடத்தவுள்ளார். அதைத் தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் சென்னை மற்றும் புதுச்சேரியில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
“சூத்ராவின் இளம் கலைஞர்களை நடன மையமான இந்தியாவை அறிமுகம் செய்வதற்காகவே, இந்த வருகையின் முக்கிய காரணம். அவர்கள் இந்தியாவில் அதிகம் நிகழ்ச்சிகள் நடத்தவில்லை, எனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் அவர்களை வெளிக்காட்ட விரும்புகிறேன்” என்று ரம்லி பெர்னாமாவிடம் கூறினார்.
ரம்லி இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் இசை வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட நபராக உள்ளார். சண்டிகரில் நடந்த நிகழ்வுக்குப் பிறகு ஜனவரி 1-ஆம் தேதி மற்றொரு நிகழ்ச்சிக்காக ரம்லியும் அவரது குழுவும் மீண்டும் இந்திய தலைநகருக்கு செல்ல இருகிறார்கள்.