Home நாடு லங்காவி தீவுகள் விற்கப்பட்டனவா? – மகாதீரின் குற்றச்சாட்டை மறுக்கும் அகமட் பாட்ஷா!

லங்காவி தீவுகள் விற்கப்பட்டனவா? – மகாதீரின் குற்றச்சாட்டை மறுக்கும் அகமட் பாட்ஷா!

1313
0
SHARE
Ad

அலோர் ஸ்டார் – லங்காவி அருகே உள்ள 3 தீவுகளை கெடா மாநில அரசு, சீனருக்கு விற்பனை செய்துவிட்டதாக துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருக்கும் குற்றச்சாட்டை அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாட்ஷா முகமது ஹனிபா மறுத்திருக்கிறார்.

“லங்காவியின் 99 தீவுகளில் ஒரு தீவு கூட சீனருக்கு விற்பனை செய்யப்படவில்லை. எனவே, அவர் (மகாதீர்) எந்த தீவு விற்பனை செய்யப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும்.

“தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக தேசிய முன்னணிக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறாதீர்கள்” என கோல கெடாவில் நடைபெற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அகமட் பாட்ஷா கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice