Home இந்தியா தமிழகம் முழுவதும் கடையடைப்பு: முதல்வர் உட்பட அதிமுகவினர் உண்ணாவிரதம்!

தமிழகம் முழுவதும் கடையடைப்பு: முதல்வர் உட்பட அதிமுகவினர் உண்ணாவிரதம்!

957
0
SHARE
Ad

சென்னை – காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் 21 லட்சம் கடைகளை வணிகர்கள் அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், மத்திய அரசைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.

அவருடன் துணை முதல் ஓ.பன்னீர்செல்வம் உட்பட முக்கிய அமைச்சர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.