Home நாடு வாகன அபராதங்களுக்கு 70 % தள்ளுபடி – ஜேபிஜே அறிவிப்பு!

வாகன அபராதங்களுக்கு 70 % தள்ளுபடி – ஜேபிஜே அறிவிப்பு!

1351
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சாலைப் போக்குவரத்து இலாகாவின் (ஜேபிஜே) 72-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஏப்ரல் மாதம் முழுவதும், மலேசிய வாகனங்களின் அனைத்து அபராதங்களுக்கும் 70 விழுக்காடு தள்ளுபடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ அப்துல் அஜிஸ் கப்ராவி, நேற்று திங்கட்கிழமை இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

“ஜேபிஜே பொது இயக்குநர் டத்தோ ஷஹாருடின் காலிட்டிடம் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதன் படி, வாகன ஓட்டிகளுக்கான அபராத தள்ளுபடி இன்று முதல் தொடங்குகிறது. வாகன ஓட்டிகள் ஜேபிஜே மையங்களுக்கு வந்து, தங்கள் வாகனத்தின் மீதான அபராதங்களைத் தள்ளுபடி விலையில் செலுத்தலாம்” என அப்துல் அஜிஸ் நேற்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும், இந்தத் தள்ளுபடி, அவாஸ் (Automated Awareness Safety System) அபராதங்களுக்குக் கிடையாது என்றும் அப்துல் அஜிஸ் குறிப்பிட்டார்.