Home 13வது பொதுத் தேர்தல் சபா எதிர்கட்சித் தலைவராக லாஜிம் உகின் தேர்வு!

சபா எதிர்கட்சித் தலைவராக லாஜிம் உகின் தேர்வு!

523
0
SHARE
Ad

Lajim_Ukin2கோத்தா கினபாலு, ஜூன் 17 – சபா மாநில சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பி.பி.பி.எஸ் கட்சித் தலைவரும், கிலியாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ லாஜிம் உகின்(படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சபா மாநில பிகேஆர் செயலாளரான டாக்டர் ரொனால்ட் கியா கூறுகையில், “அப்பி அப்பி தொகுதியின் பெண் சட்டமன்ற உறுப்பினரான கிறிஸ்டினா லியோ, சபா மாநில பிகேஆர் கட்சியின் அமர்வராகவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு லாஜிமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களது நியமனம் குறித்த கடிதத்தை பிகேஆர் பொதுச்செயலாளர் டத்தோ சைபுதீன் நாசூசன், சபாநாயகர் சாலேவுக்கு அனுப்பியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பீஃபோர்ட் நாடாளுமன்ற தொகுதியில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்ட லாஜிம், 673 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice