Home இந்தியா டெல்லி மேல்-சபை எம்.பி.யாக பிரதமர் மன்மோகன்சிங் பதவி ஏற்றார்

டெல்லி மேல்-சபை எம்.பி.யாக பிரதமர் மன்மோகன்சிங் பதவி ஏற்றார்

486
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூன் 17- பிரதமர் மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து 5-வது முறையாக டெல்லி மேல்-சபை எம்.பி. யாக சமீபத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

manmohanமேல்-சபை எம்.பி.யாக பிரதமர் மன்மோகன்சிங் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு டெல்லி மேல்-சபை தலைவரும், துணை ஜனாதி பதியுமான ஹமீத் அன்சாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அகமது பட்டேல், மோதிலால் வோரா, ராஜீவ் சுக்லா மற்றும் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், சமாஜ்வாடி தலைவர் ராம்கோபால் யாதவ் ஆகியோர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

மேல்-சபை எம்.பி.யாக பதவி ஏற்ற பிறகு பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களிடம் கூறும் போது:- அசாம் மக்களுக்கு செய்ய தனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக இதை கருதுகிறேன் என்றார்.

இதேபோல் அசாம் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்சபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யான சாண்டிலால் குஜுரும் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.