நியூயார்க், ஜூன் 17- அமெரிக்காவின் நியூ இங்கிலாந்தில் உள்ள பாட்ரியாட்ஸ் அமெரிக்கன் கால் பந்து அணியின் உரிமையாளர் ராபர்ட் கிராப்ட் ( வயது 72).
இவர் அமெரிக்காவில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். இவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (படம்) மீது திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடந்த விழாவில் புதின் கலந்து கொண்டார். அதில் நானும் பங்கேற்றேன். அப்போது நான் அணிந்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை கழற்றி நான் அவரிடம் காட்டினேன். அதை வாங்கி பார்த்து பாராட்டிய அவர் அதை தனது காற்சட்டையில் போட்டுக் கொண்டு அதாவது திருடி சென்று விட்டார்.
அதை எனது நினைவு பரிசாக அவருக்கு வழங்க நான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் இதுபோன்று செய்வார் என நான் நினைக்கவில்லை. இச்சம்பவம் புஷ் அதிபராக இருந்தபோது நடந்தது.
இதுகுறித்து நான் வெள்ளை மாளிகையில் புகார் செய்தேன். ஆனால், இதை பெரிதுபடுத்த வேண்டாம். இதன் மூலம் அமெரிக்கா- ரஷியா உறவில் சிக்கல் ஏற்படும் என அதிகாரி தெரிவித்து விட்டார். எனவே அதை நான் கண்டு கொள்ளவில்லை என்றார்.
இந்த தகவலை சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் இதை அவர் தெரிவித்தார். ஆனால் தொழில் அதிபர் ராபர்ட் கிராப்ட்டின் இந்த புகாரை புதினின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். அந்த மோதிரம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.