சென்னை, ஜூன் 18- தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் தமிழக கவர்னர் ரோசய்யா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் நாளை மாலை 4.45 மணிக்கு பதவியேற்கின்றனர்.
வாரிய தலைவர்கள் நியமனம்:-
இன்று பல்வேறு துறைக்கான வாரிய தலைவர்களையும் முதல்வர் ஜெ., நியமித்துள்ளார். இதன்படி முனியசாமி (சேமிப்பு கிடங்கு கழகம் ), வி.என்.ரவி (ஜவுளி கழகம்), பிரபாகர் ( சிறுதொழில் மேம்பாடு), அருண்மொழித்தேவன் (சுற்றுலா மேம்பாடு), செந்தில்நாதன் (பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாடு) , ரவிச்சந்திரன் (வேளாண்கழகம்), வெங்கடேஸ்வரன் ( தொழில் துறை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.