Home கலை உலகம் சிறையில் இருக்கும் சஞ்சய் தத் நடித்த “போலீஸ்கிரி” விரைவில் வெளியீடு

சிறையில் இருக்கும் சஞ்சய் தத் நடித்த “போலீஸ்கிரி” விரைவில் வெளியீடு

470
0
SHARE
Ad

Policegiri-SLiderமும்பாய், ஜூன் 18 – பயங்கரவாத சட்டத்தின் கீழ் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், சிறைக்கு செல்வதற்கு முன்னால் நடித்து முடித்திருக்கும் இந்திப்படம் “போலீஸ்கிரி”.

#TamilSchoolmychoice

தமிழில் ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் சாமி. அந்த படம்தான் இந்தியில் சஞ்சய் தத் நடிப்பில் “போலீஸ்கிரி”யாக உருவாகியுள்ளது.

“தசாவதாரம்”, “படையப்பா” போன்ற தமிழின் மிகப் பெரிய வெற்றிப் படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார்தான் போலீஸ்கிரி படத்தையும் இயக்கியிருக்கின்றார்.

சாமி படத்தில் வில்லனாக நடித்து இருப்பவர் நமது தமிழ் நடிகர் பிரகாஷ் ராஜ். இந்த படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) வெளியாகி படத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூ டியூப் எனப்படும் காணொளி இணையத் தளத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து இதுவரை ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இந்த “போலீஸ்கிரி” பட முன்னோட்டத்தைப் பார்த்திருக்கின்றனர்.

சஞ்சய் தத் சிறையில் இருக்கும்போது வெளியாகப்போகும் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதால் மாபெரும் வெற்றிடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணையத் தொடர்பின் வழி காணலாம்.