கோலாலம்பூர், ஜூன் 19 – ஒரு அமைச்சரை நியமனம் செய்வதற்கும், விலக்குவதற்கும் பிரதமருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தான் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தனக்கு எதிராக எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு சாஹிட் தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிலதிபரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்திற்கு அதிக பணம் செலவு செய்தது தொடர்பாகவும், தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை,நீதிமன்றத்தில் சந்திக்க தயார் என்றும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
“உள்துறையமைச்சராகப் பதவி வகிக்க சாஹிட்டுக்கு தகுதி இல்லை. காரணம் கடந்த 2006 ஆம் ஆண்டு தொழில் அதிபர் அமீர் அப்துல்லா பாஸிலைத் தாக்கிய குற்றத்திற்காக அவர் மீது சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று அண்மையில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் சிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.