Home 13வது பொதுத் தேர்தல் காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை

காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை

533
0
SHARE
Ad

Datuk-Seri-Anwar-Ibrahim-610x356பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19 – கோலாலம்பூர் பாடாங் மெர்போக்கில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள கறுப்பு 505 பேரணியை தடுக்கும் முயற்சியில், காவல்துறை துணைத்தலைவர் பக்ரி ஸைனின், ஒரு அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்படுவதாக  எதிர்கட்சித் தலைவர் அன்வார் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு அமைதிப்பேரணி, இதில் காவல்துறை தலையிட்டு மக்களைக் கட்டுப்படுத்துவதோ அல்லது எச்சரிக்கை விடுவதோ கூடாது” என்றும் அன்வார்   எச்சரித்துள்ளார்.

மேலும் அம்னோவிற்கு எதிராகக் கருத்து கூறிய பேரணி ஒருங்கிணைப்பாளர்கள் கைது செய்யப்பட்டதைத் தவிர, இதுவரை தேசிய அளவில் நடத்தப்பட்ட 14 அமைதிப்பேரணிகளில் எந்த ஒரு இடையூறும் ஏற்படவில்லை என்று அன்வார் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“காவல்துறை இந்த அமைதிப்பேரணி குறித்து எங்களுடன் கலந்தாலோசித்து தகுந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமே தவிர, பயமுறுத்தக் கூடாது. காவல்துறைத் துணைத்தலைவர் பக்ரி ஸைனின் ஒரு அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்படவேண்டாம்.இந்த பேரணி அமைதியான முறையில் நடைபெறும். எனவே தயவு செய்து எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்று அன்வார் கூறினார்.