Home 13வது பொதுத் தேர்தல் ‘கறுப்பு 505’ பேரணியைத் தொடர்ந்து நடத்தும் திட்டம் இல்லை – அன்வார் அறிவிப்பு

‘கறுப்பு 505’ பேரணியைத் தொடர்ந்து நடத்தும் திட்டம் இல்லை – அன்வார் அறிவிப்பு

468
0
SHARE
Ad

anwar-cloneபெட்டாலிங் ஜெயா, ஜுன் 24 –  தேர்தல் முடிவுகளுக்கு எதிராக கடந்த இரு மாதங்களாக நடத்தப்பட்டு வந்த பக்காத்தானின் ‘கறுப்பு 505’ பேரணிகளை, தொடர்ந்து நடத்தும் திட்டம் இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அரசு சாரா அமைப்புகள் அது போன்ற பேரணிகளை தொடர்ந்து நடத்தலாம் என்றும் அன்வார் கூறியுள்ளார்.

“இப்போதைக்கு பேரணிகளைத் தொடர்ந்து நடத்தும் திட்டம் இல்லை. ஆனால் அரசு சாரா அமைப்புகள் குறித்து என்னால் பேச முடியாது. பக்காத்தானைப் பொறுத்தவரை இதிலிருந்து கடந்து செல்ல வேண்டும்” என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்து செல்வது என்பது பேரணிகளை மட்டுமே குறிக்கிறது என்றும்,தேர்தல் மனுக்கள், மற்ற நாடுகளுக்கிடையே தொடர்பு கொள்ளுதல் போன்ற தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான பக்காத்தானின் போராட்டங்கள் தொடரும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியுடன் பொதுவிவாதம் 

எந்த ஒரு தலைவராக இருந்தாலும், அது தேசிய முன்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட, தாங்கள் அவர்களுடன் பொது விவாததிற்குத் தயார் என்று கூறிய அன்வார், ஆனால் அது பிகேஆர், ஜசெக மற்றும் பாஸ் ஆகிய கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து ஒன்றாக நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

“நான், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோர், நஜிப் மற்றும் முகைதீன் யாசினை நேரடியாகச் சந்திக்கத் தயாராக உள்ளோம். ஆனால் அது மறைமுக சந்திப்பாக இருக்கக் கூடாது” என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பு பிகேஆர் கட்சியின் இடங்கள் குறித்து பேசுவதற்காக என்றும், அதற்கு பாஸ் மற்றும் ஜசெக ஆகிய கட்சிகள் உடன் பட மறுக்கிறது என்றும் சில வதந்திகள் உலாவுகின்றன என்று குறிப்பிட்ட அன்வார், “ அது வெறும் வதந்திதகள் தான். அது போன்று எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.