Home இந்தியா கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு? சோனியா காந்தி முடிவு

கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு? சோனியா காந்தி முடிவு

619
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 24- தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்சபைக்கு 6 பேரை தேர்ந்தெடுக்க 27-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

அ.தி.மு.க.வை சேர்ந்த 4 வேட்பாளர்களும் கம்யூனிஸ்டு வேட்பாளர் டி.ராஜாவும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. 6-வது எம்.பி.சீட்டை பிடிப்பதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

M_Id_237672_Kanimozhiகாங்கிரசின் ஆதரவை பெற இரு கட்சிகளும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவரும் ராணுவ மந்திரியுமான ஏ.கே.அந்தோணியை சந்தித்து கனிமொழி வெற்றி பெற காங்கிரஸ் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் மேலிடம் இந்த தேர்தலை மட்டும் கருத்தில் கொள்ளவில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையும் மனதில் வைத்து எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது கைகொடுக்கும் என்ற கோணத்தில் சிந்தித்து வருகிறது.

இரு தரப்பு பேச்சு வார்த்தையின் போது இப்போது கனிமொழியை ஆதரிக்கும் படியும் விரைவில் காலியாகும் 2 இடங்களுக்கு தேர்தலில் காங்கிரசை தி.மு.க. ஆதரிக்கும் என்று உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க சோனியா முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் முகுல் வாஸ்னிக் அல்லது கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று அல்லது நாளைக்குள் அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.