Home உலகம் கட்சி தலைவருக்கான வாக்கெடுப்பில் தோல்வி: ஆஸ்திரேலிய பிரதமர் கிலார்ட் ராஜினாமா

கட்சி தலைவருக்கான வாக்கெடுப்பில் தோல்வி: ஆஸ்திரேலிய பிரதமர் கிலார்ட் ராஜினாமா

564
0
SHARE
Ad

சிட்னி, ஜூன் 26- ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் பதவிக்காலம் முடிந்து செப்டம்பர் 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு அவரது கட்சிக்குள் அதிருப்தி கிளம்பியதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இன்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

784810-julia-gillardஇதில், பிரதமர் கிலார்டை எதிர்த்து, முன்னாள் பிரதமரான கெவின் ருத் போட்டியிட்டார். வாக்கெடுப்பில் கெவின் ருத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், கிலார்டுக்கு ஆதரவாக 45 வாக்குகளும் கிடைத்தன. கெவின் ருத் வெற்றி பெற்றதையடுத்து கிலார்டு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

#TamilSchoolmychoice

நாளை வரை அவர் பதவியில் நீடிப்பார். அதேசமயம் கட்சித் தலைவராக தேர்வு பெற்றுள்ள ருத், தனக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும். பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், மெஜாரிட்டியை நிரூபிக்காவிட்டால், பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.

பல சுயேட்சை எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள தொழிலாளர் கட்சிக்கு பாராளுமன்றத்தில் மிகக்குறைந்த பெரும்பான்மையே உள்ளது. இதில் 2 சுயேட்சை உறுப்பினர்கள் இன்று அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால், அவர்களின் ஓட்டுக்களை தொழிலாளர் கட்சி பெற முடியாது.