Home கலை உலகம் அமிதாப் பச்சனைப் பொறாமைப்பட வைத்த தனுஷின் ராஞ்சனா

அமிதாப் பச்சனைப் பொறாமைப்பட வைத்த தனுஷின் ராஞ்சனா

503
0
SHARE
Ad

மும்பை, ஜூன் 26- தனுஷின் முதல் இந்தித் திரைப்படமான ராஞ்சனா சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

இதில், தனுசும், சோனம் கபூரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுதல்களை அளிக்கின்றனர்.

dhanushஇந்தித் திரையுலகின் மூத்த நடிகரும், சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் ஞாயிற்றுக்கிழமை அன்று சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது குறித்து நடந்த விழாவில் இந்தப் படத்தைப் பார்வையிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தத் திரைப்படத்தை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. இதுபோன்ற சிறந்த திரைப்படங்களைப் பார்க்கும்போது இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு சிறிய அளவிலாவது இருந்திருக்கலாமே என்று என்னைப் புலம்பவும், பொறாமைப்படவும் வைத்துவிடுகின்றது.

இளைய தலைமுறையினர் வெளிப்படுத்தும் அபரிமிதமான திறமையும், கலை நுணுக்கத்திறனும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும் என்று அமிதாப் தனது இணையதளச் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்னும் சில திறமையான இயக்குனர்கள், நடிகர்கள் நடித்து வெளிவரவிருக்கும் சில படங்களையும் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அமிதாப், இத்தகைய திரைப்படங்களைப் பார்ப்பது தனக்கு சந்தோஷத்தையே அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரகாஷ் ஜாவின் இயக்கத்தில், அமிதாப் நடித்துள்ள சத்யகிரஹா விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.