Home இந்தியா உத்தரகாண்ட் மீட்பு பணிகள் 2 நாளில் முடியும்: முதல்வர் உறுதி

உத்தரகாண்ட் மீட்பு பணிகள் 2 நாளில் முடியும்: முதல்வர் உறுதி

682
0
SHARE
Ad

uttarakhand_floods_rainsடேராடூன், ஜூன் 26- உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

vijay-bahuguna_5இந்துக்களின் புனித தலமான கேதார்நாத் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் விஜய் பகுகுணா (படம்) நிருபர்களிடம் கூறுகையில், ‘வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிக்கியுள்ள அனைவரும் 2 நாளில் மீட்கப்படுவார்கள். ஹர்சிஸ் பகுதியில் மக்கள் இன்னும் சிக்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

FLOODKEDARNATH_THD_1494101gஅவர்களை மீட்க விமானப்படை வீரர்கள் விரைந்துள்ளனர்’ என்றார். வெள்ளத்தால் சேதமடைந்துள்ள கேதார்நாத் கோவிலை மீண்டும் கட்டித் தர தயாராக இருப்பதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

இதனை ஏற்க மறுத்த முதல்வர் பகுகுணா, கேதார்நாத் கோவிலை உத்தரகாண்ட் அரசு கட்டும் என்றும், இதற்கு யாராவது உதவி செய்தால் வரவேற்போம் என்றும் கூறினார்.