Home அரசியல் கட்டம் கட்டமாக தேசியத் தலைவர் தேர்தலுக்கு தன்னை பலப்படுத்தும் பழனிவேல்!

கட்டம் கட்டமாக தேசியத் தலைவர் தேர்தலுக்கு தன்னை பலப்படுத்தும் பழனிவேல்!

448
0
SHARE
Ad

Palanivel-new-Featureஜூன் 27 செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தலில் போட்டி இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பில், டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் கட்டம் கட்டமாக தனது அரசியல் சதுரங்கக் காய்களை நகர்த்தி வருகின்றார்.

#TamilSchoolmychoice

ம.இ.கா. கட்சிக் கட்டமைப்பில், மாநிலத் தலைவர் பதவி என்பது முக்கியமான ஒன்றாகும். மாநிலத்தின் அனைத்து கிளைகளின் நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் மையமாக மாநிலத் தலைமையகம்தான் திகழும்.

தேசியத் தலைவருக்கான தேர்தல் நிகழுமானால் கிளைகளை அடையாளம் கண்டு, பிரச்சாரத்தை மேற்கொள்வதில் மாநிலத் தலைமை முக்கிய பங்கு வகிக்கும். மாநிலத் தலைவரை நியமிப்பது கட்சித் தலைவரின் அதிகாரமாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களில் மூன்று மாநிலங்களில் தலைமைத்துவத்தை மாற்றியமைத்து தனக்கு ஆதரவானவர்களை கட்சியின் அதிகார வளையத்துக்குள் பழனிவேல் கொண்டு வந்திருக்கின்றார்.

மலாக்காவில் மகாதேவன், பேராக்கில் ஆர்.கணேசன், பினாங்கில் கருப்பண்ணன் என மூவரும் பழனிவேலுவுக்கு நெருக்கமானவர்கள் என்பதோடு, இனி தங்களின் மாநிலத்தில் பழனிவேலுவுக்கு ஆதரவாக கிளைகளைத் திசை திருப்பும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள்.

மேலும் சில மாநிலங்களின் தலைமைத்துவங்களும் விரைவில் மாற்றம் காணும் என ம.இ.கா அரசியல் வட்டாரங்கள் கோடி காட்டியுள்ளன.

அதே வேளையில், மத்திய செயலவை உறுப்பினர்களில் மூவரை நீக்கி அவர்களுக்கு பதிலாக ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்களின் ஆட்சிக்குழு உறுப்பினர்களை மத்திய செயலவை உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.

இந்த மாற்றங்களை அடுத்து, கட்சியில் மேலும் சில மாற்றங்களும் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெறவிருக்கும் கட்சியின் தொகுதிகளுக்கான தேர்தலில் தனக்கு ஆதரவான தலைவர்களைக் கொண்டு வருவதில் பழனிவேல் மும்முரமாகச் செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.