Home கலை உலகம் நியூயார்க்கில் சிகிச்சை முடிந்து மும்பை திரும்பினார் மனிஷா கொய்ராலா

நியூயார்க்கில் சிகிச்சை முடிந்து மும்பை திரும்பினார் மனிஷா கொய்ராலா

604
0
SHARE
Ad

மும்பை, ஜுன் 27- இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மனிஷா கொய்ராலா. பம்பாய், இந்தியன், முதல்வன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தன் மூலம் தமிழிலும் பிரபலமானார்.

manisha_350_062613083831இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து அவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுமார் 6 மாதம் காலமாக சிகிச்சை பெற்ற அவர் பூரண குணம் அடைந்தார். இதையடுத்து இன்று மும்பை திரும்பி மனிஷா கொய்ராலா தனது வீட்டில் ஓய்வெடுக்க உள்ளார்.

#TamilSchoolmychoice

மனிஷா கொய்ராலா முன்பை விட தற்போது நன்றாக இருக்கிறார். மும்பை வந்ததும் நேராக அந்தேரியில் உள்ள அவரது வீட்டுக் சென்றுவிட்டார் என்று அவரது மானேஜர் தெரிவித்தார்.