Home கலை உலகம் என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா

என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா

678
0
SHARE
Ad

ஜூலை 25- பம்பாய், இந்தியன், முதல்வன் படங்களில் அழகாக வந்து கவர்ந்தவர் மனிஷாகொய்ரலா.

பம்பாய் படத்தில் உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு பாட்டுக்கு அவர் ஓடி வரும் காட்சி ரசிகர்களை கிறங்கடிப்பதாக இருந்தது.

manishaஅப்படிப்பட்ட மனிஷா கொய்ரலா இன்று ஆளே உரு மாறிப் போய் உள்ளார். திருமணம் அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. விவாகரத்து செய்து பிரிந்தார்.

#TamilSchoolmychoice

அதன் பிறகும் நிம்மதி பெறவில்லை. புற்று நோய் தாக்கியது. அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். மரணத்தின் விளிம்புவரை போய் மீண்டுள்ளார். பூரண குண மடைந்து விட்டார்.

manisha-1-660_072313054708முதல் தடவையாக இப்போதுள்ள தனது தோற்றத்தை படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அழகான தலை முடியை இழந்துள்ளார். கண்ணாடி அணிந்து இருக்கிறார். 42 வயதாகும் அவர் 62 வயது நிரம்பியவர் போல் காட்சி அளிக்கிறார்.

இந்த தோற்றத்துக்காக அவர் வருத்தம் அடைய வில்லை. தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். அதுவே படத்தை வெளியிட தூண்டியுள்ளது. இதன் மூலம் மற்ற நடிகைகளுக்கு உதாரணமாக திகழ்கிறார்.

இது குறித்து மனிஷா கொய்ரலா கூறும் போது இப்போதுள்ள என் தோற்றத்தை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். வெளி உலகுக்கும் இதை தெரிவிக்கிறேன். கறுப்பு வெள்ளையாக கடந்த காலம் இருந்தது. நிகழ்காலம் நன்றாக உள்ளது. கடவுள் மகிழ்ச்சியாக வைப்பார் என்றார்.