Home கலை உலகம் புற்று நோயில் இருந்து பூரணமாக குணமடைந்தார் நடிகை மனிஷா கொய்ரலா

புற்று நோயில் இருந்து பூரணமாக குணமடைந்தார் நடிகை மனிஷா கொய்ரலா

822
0
SHARE
Ad

manishaமும்பை, மே 16- பிரபல இந்தி நடிகை மனிஷா கொய்ரலா தமிழில் பம்பாய், பாபா, இந்தியன், முதல்வன் ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

42 வயதான மனிஷாகொய்ரலா சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் தொடர் சிகிச்சைக்காக அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

#TamilSchoolmychoice

சிகிச்சைக்கு பின்னர் நடிகை மனிஷா கொய்ரலா தற்போது குணம் அடைந்து உள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளமான பேஸ்புக் அகபக்கத்தில் மனிஷாகொய்ரலா கூறுகையில் அனைவரின் பிரார்த்தனையாலும் ஆசீர்வாதத்திலும் எனது உடல் நிலை சீரடைந்து படிப்படியாக புற்றுநோயில் இருந்து நான் தற்போது முழுமையாக விடுபட்டு உள்ளேன்.

நான் விரைவில் உங்களை சந்திக்க வருவேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.