Home கலை உலகம் சிறை தண்டனையை அனுபவிக்க சஞ்சய் தத் இன்று நீதிமன்றத்தில் சரண்

சிறை தண்டனையை அனுபவிக்க சஞ்சய் தத் இன்று நீதிமன்றத்தில் சரண்

669
0
SHARE
Ad

sanjay-duttமும்பை, மே 16-  மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் இன்று தடா நீதிமன்றத்தில் சரணடைகிறார்.

மும்பை தொடர்பு குண்டுவெடிப்பு வழக்கில் பிரபல நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த மார்ச் 21ம் தேதி உச்ச நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதில், ஒன்றரை ஆண்டுகளை ஏற்கனவே சிறையில் அவர் கழித்து விட்டதால், மீதமுள்ள மூன்றரை ஆண்டு தண்டனையை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் 4 வாரத்தில் சரணடையும்படி உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

ஆனால், இந்தியில் ஒப்புகொண்ட பல திரைப்படங்களை முடித்து கொடுக்காவிட்டால் தயாரிப் பாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால், சரண் அடைய கால அவகாசம் கோரினார் சஞ்சய் தத். இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், அவர் சரணடைய 4 வாரம் அவகாசம் தந்தது.

இதன்பின், சஞ்சய் தத் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு தள்ளுபடியானது.இதைத் தொடர்ந்து, சஞ்சய் தத் நடிக்கும் படங்களின் படபிடிப்பு முடியவில்லை என்றும், அவர் சரண் அடைவதற்கு மேலும் அவகாசம் தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இதுவும் நேற்று முன்தினம் தள்ளுபடியானது.இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் மும்பை சிறப்பு தடா நீதிமன்றத்தில் சஞ்சய் தத் தாக்கல் செய்த புதிய மனுவில், தனது உயிருக்கு பழமைவாத அமைப்புகளால் ஆபத்து இருப்பதால், நீதிமன்றத்தில் சரணடைவதற்கு பதிலாக எரவாடா சிறையில் சரணடைய அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

இதற்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு நீதிபதி கோவிந்த் சனாப் உத்தரவிட்டார்.இந்நிலையில், தனது மனுவை சஞ்சய் தத் நேற்று திடீரென வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து, தடா சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் சரணடைகிறார். பின்னர், புனேயில் உள்ள எரவாடா மத்திய சிறைக்கு அவர் கொண்டு செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.