Home Featured கலையுலகம் நடிகர் சஞ்சய் தத் விடுதலை!

நடிகர் சஞ்சய் தத் விடுதலை!

866
0
SHARE
Ad

sanjay-dutt_மும்பை – மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 1993-ம் ஆண்டு, மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஏகே-56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே இந்த வழக்கிற்காக, 1996-ல் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னர் 18 மாதங்கள் சிறையில் இருந்தார்.

எஞ்சிய 42 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புனேவில் உள்ள எரவாடா மத்திய சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடைக்கப்பட்டார்.

எஞ்சிய தண்டனைக் காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை உள்ளது. இந்நிலையில், நன்னடத்தை காரணமாக அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய மராத்திய அரசு முடிவெடுத்தது.

அதன்படி, இன்று பிப்ரவரி 25-ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.