Home One Line P2 புற்றுநோய் காரணமாக சஞ்சய் தத் அமெரிக்கா செல்கிறார்

புற்றுநோய் காரணமாக சஞ்சய் தத் அமெரிக்கா செல்கிறார்

670
0
SHARE
Ad

மும்பை: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூன்றாம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது, நடிகர் உடனடி சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு புறப்படுவார் என்று கூறப்படுகிறது.

இந்த தகவலை சஞ்சய் தத் தனது குடும்பத்திடம் தெரிவித்த போது அவர் முற்றிலும் மனமுடைந்துவிட்டார் என்பதை செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் அவரது மனைவி மன்யாட்டா மற்றும் குழந்தைகள் தற்போது துபாயில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் பச்சன், அபிஷேக், சல்மான் கான் போன்றவர்கள் செய்தியைக் கேட்டபின் அவரை நலம் விசாரிக்க அழைத்ததாகவும், ஆனால், அவர் யாருடைய அழைப்புகளையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

சஞ்சய் தத் மும்பை லிலாவதி மருத்துவமனையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அப்போது அவர் கொவிட்19 தொற்றுக்கு ஏதும் உட்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சஞ்சய் தத் ‘சடக் 2′ மற்றும் ‘கே.ஜி.எப்-2′ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.