முதலில் அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்கிறார். அங்கு இங்கிலாந்து-இந்தியா நாடுகளுக்கான 6-வது அமைச்சரவை பொருளாதார கூட்டத்தில் பங்குகொள்கிறார்.
இதில் இருநாடுகளுக்கு இடையே உள்ள பொருளாதார கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றிய ஆலோசனை நடைபெறுகிறது. இதில் இருநாடுகளின் நிதி மந்திரிகள் கலந்துகொள்கிறார்கள்.
ஜி20 மாநாடு பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரான்சு நாட்டுக்கு செல்கிறார். பாரீஸ் நகரில் அவர் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பின்னர் அவர் கத்தார் நாட்டின் டோகா நகருக்கு 18-ந் தேதி செல்கிறார். அந்நாட்டின் பொருளாதார துறை மந்திரி மற்றும்