Home One Line P2 நவம்பர் 22, 23-இல் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி!

நவம்பர் 22, 23-இல் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி!

995
0
SHARE
Ad

புது டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக நவம்பர் 22- 23 தேதிகளில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் பி.சிதம்பரத்தை விசாரிக்கக் கோரி அமலாக்கத் துறை இன்று வியாழக்கிழமை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தை நாடியது.

இந்த வார தொடக்கத்தில், ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாடியதுடன், நவம்பர் 15 தீர்ப்பில் அவருக்கு நிவாரணம் மறுத்து தீர்ப்பை சரிசெய்யக் கோரி அமலாக்கத் துறை டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது.

#TamilSchoolmychoice

டில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது குறிப்பிடத்தக்கது.