Home One Line P2 நவம்பர் 27 வரை ப.சிதம்பரத்திற்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு!

நவம்பர் 27 வரை ப.சிதம்பரத்திற்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு!

730
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான அமலாக்கத்துறையின் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. டில்லி நீதிமன்றம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது

கடந்த 2000-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கடந்த 2018-ஆம் ஆண்டு இது தொடர்பாக ப.சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்தது.

#TamilSchoolmychoice

சிபிஐ, .சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி கைது செய்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவர், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்

கடந்த மாதம் 16-ஆம் தேதி அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தை தங்களது தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்

அக்டோபர் 16-ஆம் தேதிக்கு பின்னர் சிதம்பரத்தின் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்று புதன்கிழமை அவரது தடுப்புக் காவல் மேலும் 14 நாட்களுக்கு, அதாவது நவம்பர் 27-ஆம் தேதி வரைக்கும் நீட்டிப்பதாக டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.