Home One Line P1 கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதது குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்!- பாஹ்மி

கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதது குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்!- பாஹ்மி

787
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி ஏன் அரசியல் பணியகக் கூட்டங்களைத் தவறவிடுகிறார் என்பதையும், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சமீபத்திய சந்திப்பு குறித்தும்  விளக்கமளிப்பதற்காக பிகேஆர் காத்திருப்பதாக பிகேஆர் தகவல் தொடர்பு தலைவர் பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.

அஸ்மினுக்கு அவ்வாறு செய்ய காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறினார்.

நேற்றிரவு புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சி அரசியல் பணியகக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொருளாதார விவகார அமைச்சருக்கு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்த போதிலும் அவர் அவ்வாறு செய்யவில்லை.

#TamilSchoolmychoice

கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொள்ளாததன் மூலம் அஸ்மின் கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை மீறியிருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த பாஹ்மி, இது உங்களைப் (ஊடகங்களின்) பொருத்தமட்டில் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்.என்று கூறினார்.

அஸ்மின் தெளிவுபடுத்த நாங்கள் ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லைஎன்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு அவர் சென்றிருக்கலாம். ஊடகங்கள் அவரிடம் கேட்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அண்மையக் காலமாக அஸ்மின் பிகேஆர் கட்சியின் கூட்டங்களில் கலந்து கொள்ளாதது அவர் கட்சியை விட்டு விலகியிருக்கும் காட்சியை ஏற்படுத்துகிறது.

கட்சியின் தலைவரான அன்வாருக்கு எதிராக அவர் செயல்படுகிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கிடையே, கடந்த திங்கட்கிழமை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்தது மேலும் நிலைமையை மோசமடையச் செய்துள்ளது. அச்சந்திப்பானது சாதாரணமான கூட்டம் என்று அஸ்மின் தெளிவுப்படுத்தியிருந்தாலும், கட்சி விவகாரத்தில் அவரது நிலை குறித்த தெளிவான விளக்கங்கள் இதுவரையிலும் அளிக்கப்படவில்லை என்பதே உண்மை.