கோலாலம்பூர்: பொருளாதார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி நேற்றிரவு திங்கட்கிழமை புத்ராஜெயாவில் உள்ள தனது இல்லத்தில் 20-க்கும் மேற்பட்ட தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு சாதாரணமான ஒன்று என்று விவரித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய அச்சந்திப்புக் கூட்டத்தை யார் நடத்தச் சொன்னது என்பது அவருக்கு நினைவில் இல்லை என்றும் பிகேஆர் துணைத் தலைவருமான அவர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கைக் கூட்டணியில் அல்லாதவர்களாக இருந்தாலும், மக்கள், வணிகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை தாம் சந்திப்பதாகவும், மக்களைப் பராமரிக்கும் ஒரு அரசாங்கத்தைப் போலவே, அரசாங்கத்தின் கொள்கைகள் என்ன என்பது குறித்து மக்களிடமிருந்தும், வணிகர்களிடமிருந்தும் கருத்துக்களைப் பெற விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இது ஒரு சாதாரணமான விவகாரம் என்றும், இதனை இந்த அளவிற்கு பெரிதுபடுத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், செய்தியாளர்கள் நேற்றைய சந்திப்புக் கூட்டத்தைக் குறித்து கேள்வி எழுப்பிய போது, அம்மாதிரியான கூட்டமொன்று நடக்காதது போலவும், அது பற்றி கூற விரும்பாத நிலையில் அவர் பதிலளித்துள்ளதாகவும் மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.