Home One Line P1 அன்வார் பிரதமராவதை தடுக்க அஸ்மின் நம்பிக்கைக் கூட்டணி, தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பா?

அன்வார் பிரதமராவதை தடுக்க அஸ்மின் நம்பிக்கைக் கூட்டணி, தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பா?

877
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி நம்பிக்கைக் கூட்டணி மற்றும் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்றிரவு திங்கட்கிழமை தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் இரவு 7 மணி முதல் அஸ்மினின் வீட்டில் இருந்ததாகவும், இரவு 11 மணிக்கு அங்கிருந்து வெளியேறியதாகவும் நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

கலந்து கொண்டவர்களில் வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சர் மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா காமாருடின், போக்குவரத்து துணை அமைச்சர் காமாருடின் ஜாபார், கோலா கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்துரா முகமட் யாசிதட், லிப்பிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் முகமட், மாரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அப்து முத்தாலிப் மற்றும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் ரம்லி முகமட் நூர் அடங்குவர்.

மேலும், கலந்து கொண்டதாக நம்பப்படும் தலைவர்களில் ஜாசின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அகமட் ஹம்சா, அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஷாஹிடான் காசிம்,  கோலா க்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் இஸ்மாயில் முகமட் சைட், கெரிக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹஸ்புல்லா ஒஸ்மான் மற்றும் பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஷாஹர் அப்துல்லா அடங்குவதாகக் கூறப்படுகிறது.

ஜெலெபு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜாமாலுடின் அலியாஸ், பெங்கேராங்டத்தோஶ்ரீ அசலினா ஓத்மான் சைட் மற்றும் பாரிட் சுலோங் – டத்தோ நோரியானி அகமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பல நம்பிக்கைக் கூட்டணி மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முகமட் அஸ்மின் சந்திப்பு தொடர்பாக வாட்சாப்பில் செய்தி பரவியது.

அச்செய்தியில் அஸ்மின் அலி மற்றும் செம்ப்ரோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசைன் இடையே ஒரு சந்திப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்குப் பிறகு பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் நாட்டின் பிரதமராக பதவி ஏற்பதை தடுக்க இந்த ஆதரவைக் கோரும் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.