கடல் படத்தில் சாத் தான் அண்ணன் என்றும், ஏசு தம்பி என்றும் பேசும் வசனத்தை நீக்க வேண்டும். 2வதாக படத்தின் கதாநாயகன் பிரசவம் பார்த்த கைகளில் ரத்தத்துடன் இருக்க உடன் இருப்பவர், என்ன ரத்தம் என்று கேட்கும் போது கதாநாயகன்,ஏசுவின் ரத்தம் என்று சொல்லும் வசனத்தை நீக்க வேண்டும்.அர்ஜூன் ‘நான் சாத் தான்’ என்று அடிக்கடி கூறுவார். அந்த படத்தில் அவரது பெயர் பெர்க்மான்ஸ். இந்த பெயர் கிறிஸ்தவர்களின் புனிதமான பெயர். இதையும் நீக்க வேண்டும்.
ஆண்டவர் மீது சத்தியம் செய்யும் காட்சிகளை யும் நீக்க வேண்டும். மேலும், திரைப்பட கிளைமாக்ஸ் காட்சியில் பாதிரியார் அரவிந்தசாமியும், சாத்தான் அர்ஜுனும் மோதிக் கொள்ளும் சண்டை காட்சியில் பாதிரி யார் அரவிந்தசாமி சாத் தான் அர்ஜுனை பார்த்து ‘நீ ஜெயித்து விட்டாய்’ என்று மூன்று முறை கூறுவார். சாத்தான் ஜெயித்ததாக வரலாறு கிடையாது. ஏசுதான் வெற்றி பெற்றார். ஆகையால் அந்த காட்சிகளையும் நீக்க வேண்டும்.
கிறிஸ்தவர்களின் மனதை பெரிதும் பாதிக்கும் வகையில் உள்ள மொத்தம் 6 காட்சிகளை கடல் படத்தில் இருந்து நீக்க வேண்டும். மேலும் படத்தை தயாரித்தவர், இயக்கிய மணிரத்னம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். திரைப்பட தணிக்கைக் குழு அதிகாரி பக்ரிசாமி மீது வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர்.