Home இந்தியா பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் கனிமொழி- ராஜா உள்பட 6 பேர் வெற்றி: தே.மு.தி.க. தோல்வி

பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் கனிமொழி- ராஜா உள்பட 6 பேர் வெற்றி: தே.மு.தி.க. தோல்வி

591
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 28-தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபையில் உறுப்பினர்களாக இருந்த 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிந்தது.

இதையடுத்து புதிய 6 எம்.பிக்களை தேர்ந்து எடுப்பதற்கு நேற்று தேர்தல்  நடந்தது. அ.தி.மு.க. சார்பில் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல் ஆகியோர் போட்டியிட்டனர்.

M_Id_237672_Kanimozhiதி.மு.க. சார்பில் கனிமொழி, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா ஆகியோர் களத்தில் இருந்தனர். 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டதால் இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

இதற்காக தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் உள்ள சட்டசபைக்குழுக் கூட்ட அறை வாக்குச்சாவடி மையமாக மாற்றப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் மைத்ரேயன், ரத்தினவேல், அர்ஜூனன் ஆகியோருக்கு தலா 36 வாக்குகள் கிடைத்தன. மற்றொரு அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமணனுக்கு 35 வாக்குகள் கிடைத்தன.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவுக்கு 34 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு 31 வாக்குகளும் கிடைத்தன. இந்த 6 வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 22 வாக்குகள் பெற்ற தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் தோல்வியடைந்தார்.