Home கலை உலகம் புற்றுநோயில் சிக்கி தவிக்கும் இயக்குனர்

புற்றுநோயில் சிக்கி தவிக்கும் இயக்குனர்

487
0
SHARE
Ad

ஜூலை 4- தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராசு மதுரவன். மறைந்த மணிவண்ணன் கூட பணியாற்றி அனுபவம் பெற்ற இவர், முதன் முதலாக இயக்கிய படம் ‘பூமகள் ஊர்வலம்’.

21386-aஇந்த படத்தைத் தொடர்ந்து, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’ போன்ற பல குடும்ப பாங்கான, கிராமத்து உறவுகளை அருமையாக சித்தரித்து படங்களை இயக்கினார்.

இவர் இப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரது நாக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் புற்றுநோய் பரவியிருப்பதை கண்டுபிடித்துள்ள மருத்துவர்கள், இதற்கு காரணம் அதிகபடியான புகைபழக்கமும், பாக்கு போடும் பழக்கமும்தான் என்று கூறியிருக்கிறார்கள்.