ஜூலை 9- பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ராசு மதுரவன். இவர் ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 44.
அவரது உடல் வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரிலிருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த அனைத்து கலைஞர்களும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Comments