கோலாலம்பூர், ஜூலை 9 – பேரரசருக்கு நன்றி தெரிவிக்கும் அறிக்கையில், நாடாளுமன்றத்தில் 13 வது பொதுத்தேர்தல் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டிருப்பதை நீக்க வேண்டும் என்று பக்காத்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகையில், “அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற பகுதிகளை பக்காத்தான் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் 13 வது பொதுத்தேர்தல் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டால், பிறகு நாங்கள் தாக்கல் செய்துள்ள தேர்தல் மனுக்களுக்கு ஒரு அர்த்தமே இல்லாமல் போய்விடும்” என்று தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலில், பல சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் முடிவுகளை எதிர்த்து, தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் ஆகிய இரண்டு அரசியல் அணிகளும் தேர்தல் மனுக்களை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.