Home நாடு கோலபெசுட் இடைத்தேர்தல்: அழியா ‘மை’ பயன்படுத்தப்படும் – தேர்தல் ஆணையம் உறுதி

கோலபெசுட் இடைத்தேர்தல்: அழியா ‘மை’ பயன்படுத்தப்படும் – தேர்தல் ஆணையம் உறுதி

765
0
SHARE
Ad

INKபெட்டாலிங் ஜெயா, ஜூலை 4 –  பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா ‘மை’ குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள போதிலும், கோல பெசுட் இடைத்தேர்தலில் அது பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்துள்ளது.

நாட்டின் தேர்தல் முறைகளில் இந்த அழியா ‘மை’ பயன்பாட்டில் உள்ளதால், இடைத்தேர்தலிலும் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஜீஸ் முகமட் யூசோப் தெரிவித்தார்.

இருப்பினும், நடந்த முடிந்த மே 5 பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மை குறித்து எழுந்த சர்ச்சைகளைக் கருத்தில் கொண்டு, அதில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“அழியா ‘மை’ முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டதால், எளிதில் அழிந்து விடுவது, காய்வதற்கு நேரமாவது, வாக்குச்சீட்டுக்களில் ஒட்டிக்கொள்வது போன்ற பல குறைபாடுகள் இருந்தன. நாங்கள் இம்முறை தரமான மையைக் கண்டறிவோம்” என்று அப்துல் அஜீஸ் இன்று பெர்னாமா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.