Home 13வது பொதுத் தேர்தல் “அழியா மை விநியோகிப்பாளர் அரசாங்கத்தின் முக்கியத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்” – ரபிஸி தகவல்

“அழியா மை விநியோகிப்பாளர் அரசாங்கத்தின் முக்கியத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்” – ரபிஸி தகவல்

686
0
SHARE
Ad

Spr-Election-INK-300x202கோலாலம்பூர், ஜூலை 16 – 13 வது பொதுத்தேர்தலில் பயன்படுத்திய அழியா மையின் விநியோகிப்பாளர் பற்றிய தகவல் முதல் முறையாக இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, ‘தேர்தல் ஆணையத்தின் உள் ஆதாரங்கள்’ மூலம் இந்த தகவலைப் பெற்றதாக மலேசியா கினி செய்தி இணையதளத்திற்கு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ரம்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அழியா மையை விநியோகித்த நிறுவனம், டி சர்ட் மற்றும் தொப்பி போன்றவைகளையும் விநியோகம் செய்கிறது. அந்த தொழிலதிபர் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரம் செய்வதில் வல்லவர். அவர் அழியா மை குத்தகையையும், பாதுகாப்பு தொடர்பான குத்தகையையும் எடுத்துள்ளார். காரணம் தேர்தல் ஆணையத்தலைவர் மற்றும் துணைத்தலைவர் உட்பட அரசாங்கத்திலுள்ள முக்கிய தலைவர்கள் இவருக்கு மிக நெருக்கமானவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், தேர்தல் ஆணையம் இந்த அழியா மையை அந்த நிறுவனத்தின் நேரடிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் வாங்கியதாகவும் ரம்லி தெரிவித்துள்ளார்.

எனினும், தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகளிடம் இது குறித்து கருத்து கேட்பதற்காக மலேசிய கினி செய்தி நிறுவனம் அந்த நிறுவனம் பற்றிய தகவலை தற்போது வெளியிடாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.