Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் ஆணையம் தனது நேர்மையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது – ரபிஸி

தேர்தல் ஆணையம் தனது நேர்மையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது – ரபிஸி

647
0
SHARE
Ad

Spr-Election-INK-300x202கோலாலம்பூர், ஜூலை 23 – தேர்தல் ஆணையம் அழியா மை குத்தகை தொடர்பில் நியாயமாக இருந்து, தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி இஸ்மாயில் கூறியிருக்கிறார்.

மேலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்த குத்தகை தொடர்பான குற்றச்சாட்டை மீண்டும் சுமத்துமாறு, தேர்தல் ஆணையம் விடுத்த சவாலை தான் நிறைவேற்றிவிட்டதாகவும் ரபிஸி கூறியுள்ளார்.

“என்னை பொறுத்தவரை நேர்மை மிக முக்கியமானது. நான் தேர்தல் ஆணையம் விடுத்த இந்த சவாலை ஏற்று, நாடாளுமன்றத்திற்கு வெளியே பலமுறை இக்குற்றச்சாட்டு குறித்து கூறிவிட்டேன். தேர்தல் ஆணையத்திற்கும் இதே போன்று நேர்மையும், நம்பகத்தன்மையும் இருக்குமானால், அவர்களும் இந்த விவகாரத்தில் நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும்” என்று ரபிஸி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அழியா மை விவகாரம் தொடர்பாக ரபிஸி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் ஆணையம் தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நபருக்கு அழியா மை தொடர்பான குத்தகையை வழங்கியதாக தெரிவித்தார்.

அத்துடன், ‘இண்டகிரேடேட் சேலஞ்சர் செண்ட்ரியான் பெர்காட்’ என்ற நிறுவனத்தின் தலைவரான முகமட் சாலே முகமட் அலிக்கு தான் அந்த அழியா மை குத்தகை வழங்கப்பட்டது என்றும் ரபிஸி சுட்டிக்காட்டினார்.

எனினும், பிரதமர் துறை அமைச்சரான சாஹிடன் காஸிம் இதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அதே நேரத்தில் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ் முகமட் யூசோப் மற்றும் துணைத்தலைவர் வான் அகமட் வான் ஓமார் ஆகியோரும் இதை மறுத்துள்ளனர். ஆனால் இதுவரை அந்த குத்தகை குறித்து விரிவான விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.