“எனக்கும், வான் அகமட் ஓமாருக்கும் (துணை தேர்தல் ஆணையர்) அந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறப்படுவதை நான் உறுதியாக மறுக்கிறேன். அழியா மை வாங்கியது தொடர்பான விவகாரங்களை தேர்தல் ஆணைய செயலாளர் கமாருதீன் பாரியா தான் கவனித்தார்” என்றும் கூறியுள்ளார்.
பிகேஆர் வியூக இயக்குனரான ரபிஸி ரம்லி இன்று வெளியிட்ட அறிக்கையில், 13 வது பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை அதன் விநியோகிப்பாளரிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டது என்றும், அந்த விநியோகிப்பாளர் தேர்தல் ஆணையத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களுடன் நெருக்கமான தொடர்புடையவர் என்று கூறியிருந்தார்.