Home நாடு தர்மேந்திரன் மரணம்: தலைமறைவாக இருக்கும் நாலாவது அதிகாரியின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டது

தர்மேந்திரன் மரணம்: தலைமறைவாக இருக்கும் நாலாவது அதிகாரியின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டது

565
0
SHARE
Ad

images (1)கோலாலம்பூர், ஜூலை 17 –  தர்மேந்திரன் மரணத்தில் தொடர்புடைய காவல்துறையைச் சேர்ந்த நான்காவது அதிகாரியின் பெயரையும், அவரது புகைப்படத்தையும் காவல்துறை நேற்று வெளியிட்டது.

நேற்று மாலை கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு தலைவர் கு சின் வா, அந்த அதிகாரியின் பெயரை பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டார். அந்த அதிகாரியின் பெயர் ஹரே கிருஷ்ணன் கே சுப்ரமணியம் என்றும் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து அவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், கு சின் வா அந்த அதிகாரியின் புகைப்படத்தை வெளியிடும் போது, தர்மேந்திரனின் பெயரையே பயன்படுத்தவில்லை மாறாக இவர் தான் காவல்துறை தேடும் அந்த 4 வது நபர் என்று மட்டும் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த மே மாதம் 22 ஆம் தேதி, சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன், மர்மமான முறையில் இறந்தார். ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது உடம்பில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், தடுப்புக்காவலில் இறந்த தர்மேந்திரன், கொலை செய்யப்பட்டதாகக் கூறி, அவரது மரணத்தில் சம்பந்தப்பட்ட 3 காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், அந்த கொலையில் நாலாவதாக ஒரு அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறிய காவல்துறை, அவரது பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில், எதிர்கட்சியைச் சேர்ந்த செகாம்புட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், காவல்துறை இவ்விவகாரத்தில் எதையோ மூடி மறைக்கிறது என்று நேற்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

“தலைமறைவாக இருக்கும் அந்த 4 வது காவல்துறை அதிகாரியின் பின்னால் ஒரு பெரிய கதை இருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன். இல்லையென்றால், காவல்துறை ஏன் அவரின் படத்தை வெளியிட மறுக்கிறது” என்றும் லிம் லிப் கூறியிருந்தார்.

அதன் பிறகு, நேற்று மாலை, தலைமறைவாக இருக்கும் அந்த நாலாவது அதிகாரி,  ஹரே கிருஷ்ணன் கே சுப்ரமணியம் என்று கூறி, அவரது புகைப்படத்தையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.