Home இந்தியா யார் பிரதமர் என்பது முக்கியமல்ல – மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதே முக்கியம்:...

யார் பிரதமர் என்பது முக்கியமல்ல – மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதே முக்கியம்: மோடி

673
0
SHARE
Ad

புவனேஸ்வர், ஜூலை 17- ஒடிசா மாநிலம் சென்றிருந்த குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி, பூரியில் உள்ள ஓர் ஓட்டலில் நடைபெற்ற ஒடிசா மாநில பா.ஜ.க. தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சிகளின் ஆட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பான பட்டியலை நீங்கள் தயார் செய்துக்கொள்ள வேண்டும்.

narendra_modi_1354621443_540x540இந்த குறைபாடுகளையும், பா.ஜ.க.வின் முக்கிய கொள்கைகளையும் விளக்கி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தது 10 ஆயிரம் வாக்காளர்களுக்கு தொடர்ந்து நீங்கள் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

#TamilSchoolmychoice

நவீன தொழில்நுட்ப உலகில் நாம் வாழ்கிறோம். கிராமங்களில் இருப்பவர்கள்கூட தற்போது ‘பேஸ் புக்’, ‘டுவிட்டர்’ ஆகியவற்றை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இந்த தொழில்நுட்பத்தை துணையாக்கி கிராம மக்களை சந்திக்க பா.ஜ.க.வினர் முயல வேண்டும்.

எல்லா கட்சிகளுக்கும் சாதி ஓட்டுக்களை பெற சாதி தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். பல்வேறு சாதி தலைவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பதவிகளை வழங்க ஒடிசா மாநில பா.ஜ.க. முன்வர வேண்டும். தேவைப்பட்டால், தங்களது பதவிகளை துறந்தாவது அவர்களை கட்சி பதவியில் அமர்த்த வேண்டும்.

1990ம் ஆண்டு குஜராத்தில் பா.ஜ.க.விற்கு வெறும் 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தனர். இப்போது அந்த மாநிலத்தை நாம்தான் ஆட்சி செய்கிறோம். இனியும் செய்வோம். இந்த நிலை ஒடிசாவிலும் ஏற்பட இங்குள்ள தலைவர்கள் உழைக்க வேண்டும்.

பா.ஜ.க. சார்பில் பிரதமர் பதவியில் யார் அமரப்போகிறார்கள் என்பது முக்கியமல்ல. மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதே முக்கியம். அந்த நோக்கத்தில் நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.