கோலாலம்பூர் – கடந்த 2013-ம் ஆண்டு, காவல்துறைத் தடுப்புக் காவலில் என்.தர்மேந்திரன் மரணமடைந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த நான்கு காவல்துறை அதிகாரிகளையும், கோலாலம்பூர் உயர்நீநீதிமன்றம் இன்று வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டிருந்த அந்த நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி கமார்டின் ஹாஷிம் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளான ஹரே கிருஷ்ணா (வயது 42), ஜப்ரி ஜாப்பார் (வயது 46), முகம்மட் நஹார் அப்துல் ரஹ்மான் (வயது 47), முகம்மட் ஹஸ்வாதி ஜம்ரி ஷாரி (வயது 34) ஆகிய நால்வரும், ஜாலான் ஹாங் துவாவில் உள்ள கோலாலம்பூர் காவல்துறை ராணுவ தலைமையகத்தில், 7 வது மாடியில், கடந்த 2013-ம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் தேதி, மதியம் 12.20 க்கும் 2.50 க்கும் இடையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரனை சித்திரவதை செய்து அவரது சாவிற்குக் காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.