Home நாடு சாஹிட் ஹாமிடி தற்காலிக விடுதலை – எதிர்க்கட்சிகள் கண்டனம்

சாஹிட் ஹாமிடி தற்காலிக விடுதலை – எதிர்க்கட்சிகள் கண்டனம்

330
0
SHARE
Ad

கோலாலம்பூர் : துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டிருப்பது எதிர்கட்சிகளிடையே கண்டனங்களை தோற்றுவித்துள்ளது.

அகால்புடி அறவாரியத்தின் பணத்தை முறைகேடாக கையாண்டதற்காக அவர் மீது கொண்டு வரப்பட்டிருந்த 47 குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொண்டு அவரை தற்காலிகமாக விடுவிப்பதாக அரசு வழக்கறிஞர் தரப்பு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. எனினும் அவர் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து இன்னும் முழுமையாக குற்றமற்றவர் என அறிவிக்கப்படவில்லை.

அவர் தொடர்பான ஊழல் வழக்குகள் மீதான விசாரணைகள் தொடர்ந்து வருவதால் தற்காலிகமாக அவர் மீதான வழக்குகளை மீட்டுக் கொண்டு அவரை விடுவிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அண்மையில் இருநூறு பக்க மேல்முறையீடு ஒன்றை சாஹிட் ஹாமிடியின் வழக்கறிஞர்கள் சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில் அவர் இந்த வழக்குகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த விடுதலையை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

அரசு தரப்பு வழக்கறிஞரின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த நீதிபதி, சாஹிட் ஹாமிடி மீதான வழக்குகள் முழுமையாக மீட்டுக் கொள்ளப்பட்டால், வருமான வரி செலுத்தும் பொதுமக்களின் பணமும், நீதித்துறையின் நேரமும் விரயமாகி விடும் என்றும் தெரிவித்தார்.